இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அப்துல்லா(11) என்ற சிறுவன் வழிதவறி, காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்துவிட்டான். சட்டப்படியான நடவடிக்கைகள் முடிய 3 நாட்கள் ஆனதால், காஷ்மீர் ராணுவத்தினர் அச்சிறுவனை நேற்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
இந்திய ராணுவத்தினர் சிறுவனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போது, அவனுக்கு புதிய ஆடைகள், இனிப்புகள் மற்றும் விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.