கெடுபிடி செய்த ஹாங்காங்; ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (08:42 IST)
ஹாங்காங்கில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில் ஹாங்காங்கிற்கான விமான சேவையை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் ஹாங்காங் பிற நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. பிற நாடுகளில் கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் விமான போக்குவரத்து சீராகி வரும் நிலையில் ஹாங்காங் தொடர்ந்து கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹாங்காங் அரசு வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்த அளவிலான விமான சேவை உள்ளிட்ட காரணங்களால் ஹாங்காங்கிற்கான ஏர் இந்தியா சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்