அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: மாணவர்கள் படுகாயம்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (22:24 IST)
அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது மாணவர்கள் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அடையாளம் தெரியாத நபர் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதன் காரணமாக அந்த பள்ளியின் மாணவர்கள் சிலர் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் பள்ளியை சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் தப்பி விட்டதாக கூறப்படுகிறது இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்