இந்திய வம்சாவளிகளுக்கு வேலை கிடையாது? இன்போசிஸில் விதிமீறல்? – முன்னாள் நிர்வாகி வழக்கு!

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (19:13 IST)
இன்போசிஸ் நிறுவனத்தில் இந்திய வம்சாவளியினருக்கு வேலை தரக்கூடாது என அதன் தலைமை நிர்வாகிகள் செயல்பட்டதாக முன்னாள் நிர்வாகி வழக்கு தொடர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பன்னாட்டு ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் பெங்களூரை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. உலகம் முழுவதும் பல இடங்களில் இன்போசிஸ் நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த இன்போசிஸ் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு பிரிவின் முன்னாள் தலைவர் ஜில் ப்ரீஜின் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

ALSO READ: விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள்: வாடகைத்தாயின் மூலம் பிறந்ததா?

அதில், இன்போசிஸ் நிறுவனம் பாலினம் மற்றும் தேசியம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டியதாகவும், இன்போசிஸ் ஆட்சேர்ப்பின்போது இந்திய வம்சாவளியினர், குழந்தை பெற்ற பெண்கள் மற்றும் 50 வயதிற்கும் மேற்பட்டவர்கள் திட்டமாக பணி வாய்ப்பு வழங்கப்படாமல் நீக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என தள்ளுபடி செய்ய இன்போசிஸ் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் அதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கை ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம் 21 நாட்களுக்கு இன்போசிஸ் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்