அவரது ஆட்சி நிர்வாகத்தின் மீது புகார்கள் எழுந்ததை அடுத்து, அவரது ஆட்சி மீத் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் தோற்ற நிலையில் எதிர்க்கட்சியின் ஆதரவில் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இம்ராங்கான், நீதிபதிகள், போலீஸாருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக அவர் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், தன் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கு சட்டத்திற்கு புறம்பாகப் பணம் பெற்றதாகவும் புகார் எழுந்ததை அடுத்து, அவர் வீட்டுக் காவல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.