முடிவுக்கு வந்த அமைதியின் நூற்றாண்டு! முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

Prasanth Karthick
திங்கள், 30 டிசம்பர் 2024 (08:51 IST)

முன்னாள் அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்ட்டர் உடல்நலக் குறைவால் காலமானதாக வெளியாகியுள்ள செய்தியை தொடர்ந்து பல உலகத் தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

சுதந்திர அமெரிக்காவில் அதிபராக செயல்பட்டவர்களில் அடக்குமுறை, பிறநாடுகள் மீதான ஆக்கிரமிப்பு போன்றவற்றிற்கு இடையே நாட்டை அமைதியான முறையில் ஆட்சி செய்தவர்கள் வெகு சிலரே. அப்படியான அதிபர்களில் ஒருவர் அமெரிக்காவின் 39வது அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர்.

 

கடந்த 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர், தனது ஆட்சி காலத்தில் அனைத்து நாடுகளுடனான அமைதி போக்கை கடைப்பிடித்தவர். இதற்காக 2002ம் ஆண்டில் ஜிம்மி கார்ட்டருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

 

தற்போது தனது 100வது வயதில் இருந்த ஜிம்மி கார்ட்டர் உடல்நலக்குறைவால் காலமானார். அமெரிக்க அதிபர்களிலேயே 100 வயது வரை வாழ்ந்த அதிபர் ஜிம்மி கார்ட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்