காதலனின் வெறியாட்டம்: காதலியின் உதட்டிற்கு 300 தையல்கள் போட்ட மருத்துவர்கள்

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (11:54 IST)
அமெரிக்காவில் காதலன் ஒருவன் தனது காதலியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவை சேர்ந்தவர் சேத் ஆரோன் ஃப்ளூரி. இவன் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறான். ஃப்லூரி கல்லூரியில் தன்னுடன் படிக்கும் ஹேயஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளான்.
 
காதலர்களான இவர்களுக்குள் அவ்வப்போது கருத்து மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. பொறுத்து பொறுத்து பார்த்த ஹேயஸ், ஃப்ளூரியின் டார்ச்சரால் அவனை விட்டு பிரிய முடிவு செய்து, அதனை ஃப்லூரியிடம் தெரிவித்துள்ளார்.
 
கடைசியாக பிரிவதற்கு முன்னர் ஃப்ளூரி, ஹேயஸுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளான். ஆனால் ஹேயஸ் ஃப்ளூரியை தடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஃப்ளூரி, ஹேயஸின் உதட்டை கடித்து துப்பியுள்ளான்.
 
வலியால் துடித்த ஹேயஸை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் 300க்கும் மேற்பட்ட தையல்கள் போட்டு ஹேயஸின் உதட்டை ஒட்ட வைத்துள்ளனர்.
 
இதனையடுத்து ஹேயஸ் அளித்த புகாரின் பேரில் சைக்கோ ஃப்ளூரியை கைது செய்த போலீஸார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்றம் அவனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்