தூத்துகுடியை சேர்ந்த அனிதாவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்தான் அருப்புக்கோட்டையை சேர்ந்த கதிரவன் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்னரே அனிதா, தனது பள்ளித்தோழர் ஜெகன் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததோடு உடனே அவருக்கு கதிரவனோடு கட்டாயத் திருமணமும் செய்து வைத்துவிட்டனர்.
இதனையடுத்து சென்னைக்கு கணவருடன் குடிவந்த அனிதா, கதிரவன் தமபதியினர் சமீபத்தில் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். அப்போது தனது காதலர் ஜெகனுக்கு தகவல் கொடுத்த அனிதா, கணவர் கதிரவனோடு கண்ணாமூச்சி விளையாடுவது போல நடித்து காதலனுடன் சேர்ந்து இரும்புக்கம்பியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்து அதன்பின்னர் நகை கொள்ளை போனதாக நாடகமாடினார்.
மேலும் விசாரணையில் அனிதா, கதிரவனை வேண்டாவெறுப்புடன் திருமணம் செய்து கொண்டதாகவும், கோத்தகிரிக்கு தேனிலவு சென்றபோதே கணவர் கதிரவனை கொலை செய்ய முயற்சித்ததாக அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளார்.