பலரை ஏமாற்றிய சிறை கைதி எனது காதலன் - பிக் பாஸ் ஐஸ்வர்யா உருக்கம்

திங்கள், 15 அக்டோபர் 2018 (18:32 IST)
பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
ஐஸ்வர்யா செல்லக்குட்டியாக நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டவர்.  இவரை பிக் பாஸின் மனைவி என்றெல்லாம் கலாய்த்துள்ளனர். ஏனென்றால் பிக் பாஸ் தனது செல்லக்குட்டியான ஐஸ்வர்யாவை கஷ்டப்பட்டு காப்பாற்றி ஃபைனல் வரை அழைத்து வந்தார் இருப்பினும் அவர் வெற்றி அடையவில்லை. 
 
இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு கோபி என்பவர் தான் மிகவும் நெருக்கமானவர் என்பது தெரிய வந்துள்ளது. ஐஸ்வர்யா அந்த கோபியின் பெயரை தனது இடது கை மோதிர விரலில் பச்சை குத்தி இருந்தார். 
 
ஐஸ்வர்யா வீட்டிற்குள் இருக்கும் போது காதலன் கோபி குறித்து பல அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. அவர் பலரின் பணத்தை மோசம் செய்து சிறைக்கு சென்றவர் என்றும், 
அதனால் , இந்த வேலையில் ஐஸ்வர்யாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா, கையில் பச்சை குத்தியிருப்பது கோபி தான் , நானும் அவரும் காதலித்தோம். அவரின் சொந்த வேலைகள் பற்றி எல்லாம் எனக்கு முன்பு தெரியாது, ஒருநாள் அந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு  தெரியவந்ததும் அதிர்ச்சியாகிவிட்டேன். அந்த காரணத்திலே இப்போது நாங்கள் பிரிந்து விட்டோம் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்