ஜப்பானில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூகம்பம் ஏற்பட்ட நிலையில் இந்த பூகம்பத்தால் 70-க்கும் மேற்பட்டவர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஈடுபாடுகள் அகற்றும் பணியை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 5 நாட்கள் கழித்து 90 வயது மூதாட்டி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்
ஜப்பானில் உள்ள இஷிவாகா மாகாணத்தில் நேற்று கட்டிடத்தில் உள்ள இடுப்பாடுகளை அகற்றிக் கொண்டிருந்தபோது ஒரு முனகல் சத்தம் கேட்டது. இதனை அடுத்து அங்கு மீட்பு பணியினார் பார்த்தபோது 90 வயது மூதாட்டி ஒருவர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடுங்கி கொண்டு இருந்தார்.
இடிபாடுகளுக்கிடையே அவர் ஐந்து நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி இருந்தது தெரியவந்ததை அடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டார். ஆனாலும் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஐந்து நாட்களுக்குப் பிறகு 90 வயது உயிருடன் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது