ஜப்பானை அடுத்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

புதன், 3 ஜனவரி 2024 (10:34 IST)
ஜப்பானில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
மேலும் அந்நாட்டில் தற்போது தீவிரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜப்பானின் நிலநடுக்கம் குறித்த அதிர்ச்சி மக்கள் மத்தியில் நீங்கும் முன்னரே ஆப்கானிஸ்தானில் இன்று அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ALSO READ: சொந்த மண்ணில் விஜயகாந்திற்கு சிலை வைக்கப்படுமா?.. மாவட்ட ஆட்சியரிடம் மனு..!!
ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் என்ற பகுதியில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து நள்ளிரவு 12.55 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 
 
அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சத்துடன் தெருவில் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்