மினி லாரி மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி..!!

புதன், 3 ஜனவரி 2024 (17:52 IST)
சீர்காழியில் மினி லாரி மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேல அகணி பகுதியை சேர்ந்தவர் அந்தோணி தாஸ் மனைவி தேத்துரு மேரி ( 70). இவர் இன்று காலை சீர்காழி பிடாரி வடக்கு வீதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பழக்கடைக்கு வந்த மினி லாரி, மூதாட்டி தேத்துரு மேரி மீது  மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 
ALSO READ: 55 ரன்களில் சுருண்டது தென்னாபிரிக்கா..!! முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்..!!
தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார், தனிப்பிரிவு போலீசார் மூர்த்தி மற்றும் காவலர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை செய்து வருகின்றனர். லாரி மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்