ஒலிம்பிக் வேண்டாம்… ஜப்பானில் 80 சதவீத மக்கள் எதிர்ப்பு!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (08:14 IST)
ஜப்பானில் கொரொனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதை 80 சதவீதம் பேர் எதிர்க்க ஆரம்பித்துள்ளதாக சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யவேண்டும் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் பல லட்சக்கணக்கானவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில் ஜப்பானில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் 80 சதவீதம் பேர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்