கொரோனா நிதி கொடுத்த சேலம் சிறுவனுக்கு டேப் உறுதியா?

திங்கள், 17 மே 2021 (19:57 IST)
கொரோனா நிதி கொடுத்த சேலம் சிறுவனுக்கு டேப் உறுதியா?
சேலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் டேப் வாங்குவதற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை தற்போது கொரோனா நிதியாக கொடுத்துள்ளதால் தமிழக முதல்வர் அந்த சிறுவனுக்கு டேப் வாங்கித் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
கொரோனா நிதியாக பொதுமக்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வரும் நிலையில் சிறுவர் சிறுமிகளும் தாங்கள் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்து வருகின்றனர் 
 
மதுரையைச் சேர்ந்த சிறுவன் சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்ததை அடுத்து அந்த சிறுவனுக்கு தமிழக முதல்வர் சைக்கிள் வாங்கி கொடுத்தார். இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் ஆன்லைன் பாடம் படிக்க கடந்த ஒரு ஆண்டாக உண்டியல் சேமித்து வைத்திருந்தார். அதில் மொத்தம் 2 ஆயிரத்து 60 ரூபாய் இருந்த நிலையில் அந்த பணத்தை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதியாக ஒப்படைத்துள்ளனர் 
 
இதுகுறித்த தகவல் தெரிந்ததும் தமிழக முதல்வர் அந்த சிறுவனுக்கு டேப் வாங்கிக் கொடுப்பார் என்று நெட்டிசன்கள் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்