இன்னும் ஒருசில தினங்களில் 18 வயதினர்களுக்கும் தடுப்பூசி: அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

செவ்வாய், 18 மே 2021 (07:38 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இன்னும் ஒருசில தினங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’இதுவரை தமிழகத்தில் 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மாநிலத்தில் 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அந்த வகையில் 18 வயதிற்கு குறைவானவர்கள் தவிர அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை முழு ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது என்றும் விரைவில் தோற்று முழுமையாக குறையும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்