ஒரே மாதத்தில் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பு: சீனாவில் கோரத்தாண்டம் ஆடும் கொரோனா!

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (13:16 IST)
சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக கோரத்தாண்டவம் ஆடி வருவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஒரே மாதத்தில் 60 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சீனா கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்த தகவல்களை வெளியிடாத நிலையில் தற்போது பசித்திருக்கும் தகவலின் படி கடந்த டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டு இருப்பதாகவும் சீன சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் சீனாவில் தொடர்ந்து மோசமான நிலை பரவி வருவதால் கொரோனா குறித்த உண்மையான தகவல்களை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவை கேட்டுக் கொண்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்