உலகக் கோப்பையில் இடம்பெற எல்லா வேலைகளையும் அவர் செய்கிறார்… இளம் பவுலர் குறித்து பதான் கருத்து!

சனி, 14 ஜனவரி 2023 (15:31 IST)
இந்திய அணியில் பூம்ரா இல்லாத காரணத்தால் சிராஜ் அதிகளவில் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி விக்கெட்களை வீழ்த்தி கவனத்தை ஈர்த்துள்ளார். தொடர்ந்து சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வரும் சிராஜ் தேர்வுக்குழுவினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிராஜ் பற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் “ இந்த ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பையில் தன் பெயர் இடம்பெற வேண்டும் என்பதற்கான வேலைகளை சிராஜ் செய்துவருகிறார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். உலகக்கோப்பையை வெலல் வேண்டும் என்றால் அணியில் சிராஜுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்