ஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (12:04 IST)
ஈரானில் நேற்றிரவு அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 
 
நேற்றிரவு 4.2 ரிகடர் அளவில் ஈரான் நாட்டில் உள்ள டெஹ்ரானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு எந்தவித சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை.
 
இதனையடுத்து, சில மணி நேரத்துக்குள் 5.3 ரிக்டர் அளவில் ஈரான் மேற்கு பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 38-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்