நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்: வெடிக்கும் அபாயம்?

திங்கள், 8 ஜனவரி 2018 (19:43 IST)
1,.36,000 டன் அளவிலான இரான் நாட்டு எண்ணெயை சுமந்து வந்த சான்சி கப்பல் ஷாங்காயிலிருந்து 160 நாட்டிகல் மைல் தூரத்தில் சீன சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
 
சீனாவில் எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளாகி இரண்டு நாட்களாகியும் எண்ணெய் கசிவு தொடர்வதால், கிழக்கு சீன கடலில் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இரான் நாட்டு எண்ணெயை சுமந்து வந்த சான்சி கப்பலில் பற்றிய தீ இன்னமும் எரிந்து வருகிறது. இந்த விபத்தில் 32 பேர் காணாமல் போய்யுள்ளனர். தீவிபத்து ஏற்பட்டு கடற்பரப்பில் எண்ணெய் படர்ந்துள்ளதால் சீனாவிற்கு, உதவி செய்ய அமெரிக்க கடற்படை ராணுவ விமானத்தை அனுப்பியுள்ளது.
 
எண்ணெயை விட லேசான படிமத்தை கொண்டிருக்கக்கூடிய ஆவி மாதிரியான இந்த திரவம், கடல்பரப்பில் கலக்கும்போது, கச்சா எண்ணெயை ஏற்படுத்துவதை விட சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், இந்த திரவத்திற்கு நிறமோ அல்லது நறுமணமோ இல்லை என்பதால், இதனை கடலில் கண்டுபிடித்து சுத்தப்படுத்துவது மிக சிரமமானது எனவும் தெரிகிறது. இந்நிலையில், ஈரான் எண்ணெய் கப்பல் வெடித்து சிதறும் நிலை உள்ளதால், அங்கு பெருமளவு சுற்றுச்சூழல் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்