ஈரானுக்கு ஏவுகணை: கொம்பு சீவி விடும் வடகொரியா??

செவ்வாய், 23 ஜனவரி 2018 (18:31 IST)
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது.
 
இருப்பினும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. தற்போது, ஈரானுக்கு ஏவுகணைகளை வடகொரியா வழங்கியுள்ளதாக கட்டுரை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் வடகொரியா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
ஈரானுக்கு கப்பல்கள் மூலமாக வடகொரியா கள்ளத்தனமாக ஏவுகணைகளை ஏற்றுமதி செய்து வருகிறதாம். இவை மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அமெரிக்கா தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், வடகொரியா தனது பகையை தீர்க்க ஈரானை தன்பக்கம் இழுக்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும், குறைந்த பட்சம் வடகொரிய கப்பல்கள் அதன் கடல் எல்லையில் ஆயுதங்களை விற்பனை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கட்டுரையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்