23.54 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (07:09 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 23.54 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 235,417,004 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 4,811,563 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 212,226,720 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 18,378,721 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,490,897 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 719,674 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 33,917,959என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,459,117 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 597,749 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,036,947 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,812,559 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 448,846 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 20,436,127 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்