பீஸ்ட் படத்தில் பாடல் எழுதி இருக்கிறேனா? சிவகார்த்திகேயன் சொன்ன பதில்!

சனி, 2 அக்டோபர் 2021 (15:13 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் பீஸ்ட் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளதாக சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்காம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விரைவில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இதுபற்றி சிவகார்த்திகேயனிடம் ஒரு நிகழ்ச்சியில் கேட்டபோது ‘ஆமாம்… அதைப் பற்றி படக்குழுவே விரைவில் அறிவிப்பார்கள்’ என கூறியுள்ளார். பீஸ்ட் படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர்களான நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்