2022ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு! – மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு!

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (15:57 IST)
2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்ப்ரட் நோபல் நினைவாக பல்வேறு அறிவியல் சார்ந்த துறைகளுக்கும் நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 2022ம் ஆண்டில் அறிவியல் துறைகளில் சிறந்த பங்களிப்புகளை செய்தவர்களுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இன்று இயற்பியல் பிரிவில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் விஞ்ஞானிகளான ஆலைன் அஸ்பெக்ட், ஜான் எஃப் க்ளாஸர், ஆண்டன் செலிங்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஃபோட்டான்களுடன் சோதனைகள், பெல் ஏற்றத்தாழ்வுகளின் மீறலை நிறுவுதல் மற்றும் குவாண்டம் தகவல் குறித்த ஆராய்ச்சிகளுக்காக இந்த நோபல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்