துருக்கி பூகம்பம்: 129 மணி நேரத்திற்கு பின் 2 மாத குழந்தை உயிருடன் மீட்பு..!
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 25 ஆயிரம் பேர்களுக்கும் அதிகமானோர் பலியான நிலையில் இரண்டு மாத குழந்தை 129 மணி நேரத்திற்கு பின்னர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கழித்து இரண்டு மாத குழந்தை ஒன்று இடிபாடுகளுடன் மீட்கப்பட்டதாகவும் உடனடியாக அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புடையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அவர்களில் இரண்டு பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.
பூகம்பம் ஏற்பட்டு ஐந்து நாட்களுக்கு பின்னரும் இன்னும் உயிருடன் பொதுமக்கள் மீட்கப்படுவதால் மீட்ப படையினர் மிகவும் துரிதமாக மீட்பு பணியை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.