கடற்கரையில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு நடுவே தரையிறங்கிய விமானம்; 2 பேர் பலி

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (12:45 IST)
போர்ச்சுகல் கடற்கரையில் மக்கள் கூட்டத்திற்குள் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
போர்ச்சுகல் நாட்டில் கபாரிகா பகுதியில் உள்ள கடற்கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் இருந்தபோது திடீரென சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தை கண்ட மக்கள் அதிர்ச்சியில் அங்கும் இங்கும் சிதறி ஓடியுள்ளனர். சிலர் கடலில் ஓடியுள்ளனர். 
 
இதில் கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமி மற்றும் 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த இரண்டு நபர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சம்பவ இடத்திலிருந்த மக்கள் தெரிவித்தனர். 
 
இதையடுத்து விமானத்தில் இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடற்கரையில் அவசரமாக தரையிறக்க நேரிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்