சென்னையில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் தகவல்

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (12:35 IST)
சென்னையில் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


 

 
சென்னையை தவிர, தமிழகத்தின் பல இடங்களில் கடந்த மூன்று நாட்களாக வெயிலின் கொடுமை அதிக அளவில் இருந்தது. அதேசமயம், மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை மக்களை வெயில் வாட்டியது. மேலும், கடந்த மூன்று நாட்களாக சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
 
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது “ வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் வரும் மூன்று நாட்களுக்கு லேசான அல்லது கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. முக்கியமாக 4 மற்றும் 5ம் தேதிகளில் தமிழகம் முக்கியமாக சென்னை மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பட இடங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்