சவுதி எல்லைக்குள் நுழைந்த மோடி விமானம்! சுற்றி வந்த அரேபிய போர் விமானங்கள்! - வைரலாகும் வீடியோ!

Prasanth Karthick

செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (15:59 IST)

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அரசு முறை பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார்.

 

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, சவுதி சென்று அங்கு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்க உள்ளார். அதன் பின்னர் இருநாட்டு உறவு, வர்த்தகம் மற்றும் பிற முக்கியமான ஒப்பந்தங்கள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும் என்றும், சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

தற்போது சில மணி நேரங்களுக்கு முன்னதாக பிரதமர் மோடியின் விமான சவுதி அரேபியா எல்லைக்குள் நுழைந்தது. விமானம் நுழைந்ததுமே சவுதி அரேபிய அரசு, பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாகவும், பாதுகாப்பு அளிக்கும் விதமாகவும் எஃப்15 ரக போர் விமானங்களை பிரதமரின் விமானத்திற்கு இரு பக்கமும் அணி வகுத்து வர செய்தனர்.

 

இந்த வீடியோவை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு சவுதி அளித்த இந்த வரவேற்பு வைரலாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

#WATCH | In a special gesture, fighter planes from Saudi Arabia escort Prime Minister Narendra Modi's plane as it entered Saudi airspace to Jeddah. pic.twitter.com/Vhzxd6ir5p

— ANI (@ANI) April 22, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்