உலகிலேயே முதல் முறையாக ஆணுறுப்பு மாற்று ஆப்ரேஷன் சக்சஸ்

Webdunia
செவ்வாய், 17 மே 2016 (13:35 IST)
உலகிலேயே முதன்முறையாக அமெரிக்க மருத்துவர்கள் ஆணுறுப்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
 

 
அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சேர்ந்தவர் தாமஸ் மேன்னிங் (64) என்பவர் புற்றுநோய் காரணமாக மஸ்ஸாசுசெட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பின்னர், தோல் மாற்று மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களுடம் ஆலோசித்துள்ளார்.
 
பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி இறந்தவரிடம் இருந்து ஆண் உறுப்பு தானம் பெறப்பட்டு கடந்த வாரம் உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் நடத்தப்பட்டது. சுமார் 15 மணி நேரம் இந்த ஆபரேசனை நடத்தினர். முடிவில் ஆபரேசன் வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது.
 
அறுவை சிகிச்சை முடிந்தாலும், சாதாரண மனிதர்கள் போல உடலுறவில் தாமஸ் கென்னிங்கும் ஈடுபட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
இது குறித்து தாமஸ் மேன்னிங் கூறுகையில், “உணர்வுப்பூர்வாமாகவே அவர்கள் அருமையாக செய்து முடித்துள்ளனர். அவர்கள் இதை எப்படி கையாண்டனர் என்று நினைக்கும்போது உண்மையிலேயே ஆச்சர்யமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்