சென்னையில் புயல்: மணிக்கு 60.கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 17 மே 2016 (13:33 IST)
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த 24 மணி நேர்த்தில் 60 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


 
 
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடித்து வருவதாலும், அது புயலாக மாறியதாலும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் புயல் காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் புயல் காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த 72 மணி நேரம் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்