காப்பகத்தில் தீ விபத்து; 15 குழந்தைகள் பலியான சோக சம்பவம்

Arun Prasath
சனி, 15 பிப்ரவரி 2020 (11:28 IST)
மெக்சிகோ நாட்டில் உள்ள காப்பகத்தில் திடீரென தீப்பற்றியதில் 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெக்சிகோவின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள் ஹைடியன் என்னும் நகரத்தில் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் ஒன்று உள்ளது. அதில் 66 குழந்தைகள் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தீடீரென அக்காப்பகத்தில் தீ பிடித்தது. தீ இரண்டாவது தளத்திற்கும் பரவியதால் குழந்தைகள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து உடனடியாக வந்த தீயணைப்புப் படையினர், கட்டடத்திற்குள் சிக்கி இருந்த சிறுவர்களை மீட்டனர்.

இதில் 15 குழந்தைகள் தீயில் கருகி பலியாகியுள்ளனர். மேலும் பல குழந்தைகள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்