பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி பாய்க்கு இரண்டரை ஆண்டு சிறை

Arun Prasath

புதன், 12 பிப்ரவரி 2020 (21:04 IST)
சிசிடிவி ஸ்கிரீன்ஷாட்

துருக்கியில் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சாவில் எச்சில் துப்பி டெலிவரி செய்தவருக்கு 2 ½ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் எஸ்கிசெஹிர் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு உணவகத்தில் டெலிவரி வேலை பார்த்துக்கொண்டிருந்த புராக் என்பவர், வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சாவில் எச்சில் துப்பி டெலிவரி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. வாடிக்கையாளரின் குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமராவில் இது பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இது குறித்தான விசாரணை நடந்த போது தான் எந்த தவறு செய்யவில்லை என புராக் குற்றத்தை மறுத்துள்ளார். எனினும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து நீதிமன்றம் இவருக்கு 2 ½ ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்