உலக கொரோனா பாதிப்பு 1.56 கோடியாக உயர்வு: தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் குறையுமா?

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (06:31 IST)
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.56 கோடியாக அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஆக்ஸ்போர்டு பல்கலை உள்பட ஒருசில அமைப்புகள் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளதால் வரும் காலத்தில் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
சற்றுமுன் வெளியான உலக சுகாதார மையத்தின் தகவலின்படி உலக அளவில் இதுவரை 15,640,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் உலக அளவில் 9,528,714 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்றும், 635,666 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இதுவரை 4,169,991பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 147,333பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 1,979,617 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 2,287,475 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1311 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், பிரேசிலில் கொரோனா தொற்றால் மொத்த இறப்பு எண்ணிக்கை 84,082 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் பிரேசிலை அடுத்து ரஷ்யாவில் 795,038 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தென்னாப்பிரிக்காவில் 408,052 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,பெருவில் 371,096 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மெக்சிகோவில் 362,274 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலி நாட்டில் 338,759 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 317,246 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்