தூத்துகுடி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!

வியாழன், 23 ஜூலை 2020 (18:18 IST)
தூத்துகுடி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகமாகி வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போன்றவர்களும் கொரோனா வைரஸால் கடந்த சில வாரங்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர்கள் உள்பட 18 எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் அவர்களில் சிலர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துகுடி திமுக எம்எல்ஏ கீதாஜீவன் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
தூத்துகுடி திமுக எம்எல்ஏ கீதாஜீவன் அவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் அமைச்சர்கள் உள்பட 18 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்