31 வயது பெண்ணை திருமணம் செய்த ஜாக்கிசானின் மகள்

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (08:25 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மகள் எட்டா நக் (19) 31 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
நடிகர், தற்காப்புக் கலை நிபுணர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என்று முத்திரை பதித்தவர் ஜாக்கி சான். 30 திரைப்படங்களை இயக்கியுள்ள ஜாக்கிச் சானுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
 
ஜாக்கி சானுக்கும் முன்னாள் ஹாங்காங் அழகி எலைன் நங் அவர்களுக்கும் பிறந்தவர் தான் எட்டா நங். ஜாக்கி சானின் மகளான எட்டா நங் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்டது. இதனால் அவர் தனது பெற்றோரிடம் பிரிந்து தனியாக வசித்து வருவதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில் கனடா நாட்டை சேர்ந்த சமூக ஊடக பிரபலமான அட்டுன்(31) என்ற பெண்ணை எட்டா ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே தனது மகள் ஓரினச்சேர்க்கையாளர் என்பதையறிந்து மனமுடைந்த ஜாக்கி சான் மகளின் இந்த செயலால் மேலும் அப்செட்டாக உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்