திருமணம் நடந்த கையோடு நிவாரண உதவிகளை வழங்கிய தம்பதி

திங்கள், 26 நவம்பர் 2018 (18:31 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருமணம் நடந்த கையோடு நிவாரண உதவிகளை வழங்கிய தம்பதி சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரூர் மாவட்டத்திலிருந்து பலதரப்பட்ட மக்கள் மற்றும் தன்னாவர்களால் முன் வந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானே முன் வந்து பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில்  நேற்று செந்தில்குமார், இந்துமதி ஆகியோர் திருமணம் கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. திருணம் முடிந்து மாப்பிள்ளை பெண்வீட்டுக்கு செல்லும் போது தனது கணவனிடம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதாவது உதவி செய்யவேண்டும் என்று கேட்டு கொண்டார். இதை ஏற்று கொண்ட கணவர் செந்தில்குமார் தனது மனைவியின் முதல் ஆசையை கண்டு பூரித்து போனார் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கரூர் ஸ்ரீ கல்யாணபசுதீஸ்வர ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பாக கஜா புயல் நிவாரண நிதியை பெற்று வருகினறனர்.



அபோது புதுமண தம்பதிகளான செந்தில்குமார், இந்து மதி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கினர். இது குறித்து புது மாப்பிள்ளையிடமும், அவருடைய மனைவியிடமும் கேட்ட போது, ஆதரவற்ற குழந்தைகளுடன் எங்களுடைய திருமணம் நடைபெற வேண்டும் என்று ஆசை பட்டோம் தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த சிறு உதவிகள் செய்துள்ளோம் மேலும் அனைவரும் முடிந்த அளவிற்கு உதவிகள் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.




மேலும், பொருளுதவிகளை பெற்றுக் கொண்ட கரூர் லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகி சூர்யா வே.கதிரவன் இதே போல அனைத்து தர மக்களும் தங்களது கடமையாக இந்த நிவாரண பொருட்களை தந்து உதவினால் மனிதநேயம் வளரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை, என்றும், அந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களையும், இன்று மட்டும் இரு தம்பதியினர் வந்து, திருமணம் நடந்த கையோடு, வந்து நிவாரண நிதிகளையும், பொருட்களையும் கொடுத்தது அவர்களது தியாக உணர்வை வெளிக்காட்டுகின்றது என்றார்.

சி.ஆனந்தகுமார்



 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்