மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான தக் லைஃப் படம் கடந்த 5 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.
நாயகன் படத்துக்குப் பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு நிலவியது. ஆனால் படம் ரிலீஸான பின்னர் ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் மிக மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக வசூல் பெரிய அளவில் சரிந்துள்ளது.
தற்போது படம் வெளியாகி இரண்டாவது வாரத்தைக் கடந்துள்ள நிலையில் இன்னமும் இந்திய அளவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கூடக் கடக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. நேற்று விடுமுறை நாளான சனிக்கிழமையில் கூட ஒரு கோடி ரூபாய் வசூலைக் கடக்கவில்லை என sacnilk இணையதளம் ட்ராக் செய்து தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை 45 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய அளவில் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.