சர்ச்சையில் சிக்கிய தீபிகா, ரன்வீர் திருமணம் - சோகத்தில் மூழ்கிய புது தம்பதிகள்

வியாழன், 22 நவம்பர் 2018 (20:45 IST)
இந்தி நடிகை தீபிகா படுகோனும், பிரபல இந்தி பட ஹீரோ ரன்வீர் சிங்கும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் வெகு விமர்சியாக சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
 
இத்தாலியில் நெருக்கமானவர்கள் மட்டும் வைத்து மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்தியா வந்த இந்த ஜோடி பெங்களூரு மற்றும் மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.
 
தற்போது இந்த திருமணம் மத நம்பிக்கையை மீறிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. "சீக்கிய மத திருமணத்தை சீக்கிய குருத்வாராவில் மட்டுமே நடத்த வேண்டும். ஓட்டல் மற்றும் ரிசார்ட்டில் திருமணத்தை நடத்த கூடாது" என இத்தாலியில் உள்ள சீக்கிய சமூக தலைவர் சுக்தேவ் சிங்க் குற்றம் சாட்டி உள்ளார்.
 
இது பற்றி சீக்கிய குருத்வாரா கமிட்டி விசாரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தீபிகா மற்றும் ரன்பீர் மனவருத்தத்தில் உள்ளனராம், 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்