பல பகுதிகளில் இருந்தும் சென்னையில் குவிந்த அனிமே ரசிகர்கள்! – தி பாய் அண்ட் தி ஹெரான் கொண்டாட்டம்!

Prasanth Karthick
திங்கள், 13 மே 2024 (20:11 IST)
ஜப்பானிய இயக்குனர் ஹயாவோ மியாசாகி இயக்கிய The boy and the heron திரைப்படத்தை காண ஏராளமான அனிமே ரசிகர்கள் ஒன்றாக குவிந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.



90ஸ் கிட்ஸ்களுக்கு டாம் அண்ட் ஜெர்ரி, ஸ்கூபி டூ போன்ற அமெரிக்க கார்ட்டூன்கள் விருப்பமான தொடராக இருந்து வந்தது போல, தற்போதைய காலகட்ட இளைஞர்கள், சிறுவர்களுக்கு ஜப்பானிய அனிமே விருப்பமானதாக மாறியுள்ளது. பலரும் நருட்டோ, ஒன் பீஸ், டீமன் ஸ்லேயர் என பல அனிமே தொடர்களை பார்ப்பதுடன் இதற்காக குழுக்களையும் உருவாக்கி பலரையும் ஊக்குவித்து வருகின்றனர்.

அவ்வாறாக அனிமே, ஜப்பானிய கலாச்சாரத்தை விரும்பும் அனிமே குழுவினர் இணைந்து The Boy and the Heron பட வெளியீட்டை சென்னை பிவிஆர் திரையரங்கில் கொண்டாடினர். ஜப்பானிய இயக்குனர் ஹயாவோ மியாசாகி இயக்கிய இந்த படம் சமீபத்தில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.



The Boy and the Heron சிறப்பு காட்சியை பார்க்க வந்த அனிமே ரசிகர்கள் பலர் மியாசாகியின் படங்களில் வரும் கதாப்பாத்திரங்கள் போல வேடமிட்டு வந்திருந்தனர். திரைப்படம் முடிந்து அனிமே இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொடர்ந்து இதுபோல பல அனிமே திரைப்படங்கள் வெளியாகும்போதும் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளும், நிகழ்ச்சிகளும் நடைபெறுவதாக அனிமே குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்