உலகம் முழுவதும் புகழ்பெற்றிருக்கு ஜப்பான் அனிமே தொடர்களில் ஒன்று ட்ராகன் பால். இந்தியாவில் 90ஸ் கிட்ஸ் இடையே ட்ராகன் பாலும், போக்கிமானும் சிறுவயது முதலே பிரபலம். இந்த ட்ராகன் பாலை முதன்முறையாக உருவாக்கி மாங்கா புத்தகமாக வெளியிட்டவர் அகிரா டொரியமா.
ஜப்பானில் பிறந்த அகிரா டொரியமா சிறுவயது முதலே வரைவதில் கொண்ட ஆர்வம் காரணமாக டாக்டர் ஸ்லம்ப், ஜாக்கோ தி கேலக்டிக் உள்ளிட்ட பல மாங்கா சித்திரக்கதை புத்தகங்களை எழுதி வரைந்தார். 1984ல் இவர் தொடங்கிய ட்ராகன் பால் கதைத்தொடர் உலகம் முழுவதும் ஹிட் ஆகி, பின்னர் அனிமே கார்ட்டூனாகவும் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களை ஏற்படுத்தியது.
ட்ராகன் பால் இதுவரை 804 எபிசோடுகள், 19 தனி திரைப்படங்கள் என இன்னும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது. 68 வயதான அகிரா டொரியமா Ubdural Hematoma என்ற நோயால் பாதிக்கப்பட்டு மார்ச் 1 அன்று உயிரிழந்துள்ளார். ஆனால் இன்றுதான் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ட்ராகன் பால் குறித்த தங்களது பால்ய நினைவுகளை பகிர்ந்து அகிராவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.