தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும். கத்தரிக்காயை நீளமாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக ஆனதும் தக்காளி, கத்தரிக்காயை வதக்கவும். தேவையானால் 2 ஸ்பூன் தண்ணீர் தெளித்து வேக வைக்கவும் காய் வெந்ததும் மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி சிம்மில் வைக்கவும். அடுப்பிலிருந்து எடுக்கும் சமயத்தில் மிளகு தூள் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.