இட்லி தமிழ் மக்களின் அன்றாட காலை உணவில் முக்கியமானது. ஆனால் அரிதாகவே பலருக்கும் தட்டு இட்லியை தெரியும். தட்டு இட்லி சாதாரண இட்லியை விட பெரிதாக இருக்கும். கமகமக்கும் சுவையான தட்டு இட்லியை வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையானவை: 2 கப் இட்லி அரிசி, ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் உளுந்து, சமையல் சோடா அரை ஸ்பூன், பழைய சாதம், உப்பு தேவையான அளவு.
முதலில் இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அவற்றை பழைய சாதத்துடன் கலந்து 4 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஊற வைத்த தண்ணீரை வடிக்காமல் அப்படியே அரைக்க வேண்டும்.
இட்லி சுடும் பதத்திற்கு மாவு அரைந்த பின் உப்பு சேர்த்து 10 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்.
இட்லி சுடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக மாவில் சமையல் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மாவை பெரிய தட்டுகளில் ஊற்றி இட்லி பானையில் வைத்து அவித்து எடுக்க வேண்டும்.
தட்டு இட்லிக்கு எண்ணெய் பொடி, சட்னி, சாம்பார் எல்லாம் சிறந்த சுவையை தரும்.