ஏசிஎஸ் மத்திய அறிவியல் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரையில், அறிவியல் விஞ்ஞானிகள் இந்த புதிய கண்டுபிடிப்புக் குறித்து தங்களது விவாதங்களை முன்வைத்துள்ளனர். அறிவியல் விஞ்ஞானி பால் ஹர்ஜென்ரோதர் மற்றும் அவரது குழுவினர் ஏற்கனவே "எர்சோ (ErSO)" என்ற மூலக்கூறை கண்டறிந்தனர். ஆனால், அதற்கு பக்கவிளைவுகள் இருந்தது.
2022ஆம் ஆண்டில், அதே குழு "எர்சோ-டிஎஃப்பிஒய் (ErSO-TFPy)" என்ற புதிய மூலக்கூறை உருவாக்கினர். இது, இஆர்+ (ER+) செல்களை அழிக்கவும், புற்றுநோய் பெருக்கத்தைத் தடுக்கவும், பக்கவிளைவுகளின்றி செயல்படுவதையும் எலி, பூனை, நாய்களில் நடந்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரே தவணையில் கொடுக்கப்படும் இந்த மருந்து, சிறிய பெரிய புற்றுநோய்க் கட்டிகளை கரைக்கிறது. இதர மருந்துகளைப்போல் தொடர்ந்து சிகிச்சை தேவையில்லை என்பதும், இதற்கு பக்கவிளைவுகள் இல்லாததும் மிக முக்கியமான முன்னேற்றமாகும்.
பொதுவாக மார்பகப் புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை, கீமோதெரபி, ரேடியோதெரபி போன்றவை வழங்கப்படுகின்றன. இவை பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால், எர்சோ-டிஎஃப்பிஒய் மருந்து, எதிர்காலத்தில் ஒரு பாதுகாப்பான சிகிச்சையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.