முதலில் சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றி அதில் பூண்டுகளை போட்டுபொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடலைப்பருப்பை போட்டு அதையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸியில் வறுத்தெடுத்த பூண்டு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, புளி, காய்ந்த மிளகாய் இவற்றையெல்லாம் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய்யை ஊற்றி கடுகு, கறிவேப்பிலைதாளித்து, அரைத்து வைத்த விழுதை இதில் சேர்த்து இறக்கி வைக்கவும். பூண்டை அப்படியே சாப்பிட மறுப்பவர்களுக்கு இப்படி சட்னி அடிக்கடி செய்து கொடுத்தால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த பூண்டு சட்னி தயிர்சாதம், தோசை, இட்லி போன்ற உணவுகளுக்கு தெட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.