ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

Mahendran

திங்கள், 21 ஏப்ரல் 2025 (18:38 IST)
ஜீன்ஸ் என்பது ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அணியும் ஒரு விருப்பத்திற்குரிய உடையாக இருக்கும் நிலையில் ஜீன்ஸ் அணிந்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என்பதை தற்போது பார்போம்.
 
 மழைக்காலத்தில் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகள் அணிவதனால் சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கின்றது. இவை அணியும்போது காற்று உள்ளே போக முடியாமல்  பாக்டீரியாவின் பரவலை ஊக்குவிக்கும் வாய்ப்பு உண்டாகிறது. 
 
குறிப்பாக, கல்லூரி செல்லும் பெண்கள் இதனால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. ஆகவே, கல்லூரி செல்லும் பெண்கள் வாரத்தின் சில நாட்களில் ஜீன்ஸ் பதிலாக தளர்வான ஆடைகளை அணியவேண்டியது சிறந்தது.
 
மேலும், அதிக வெப்பநிலையில் வேலை செய்யும் அல்லது வெயிலில் வெளியில் செல்வோர் ஜீன்ஸ் அணிவதை குறைப்பது நல்லது எனவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 
 
கால்களை இறுக்கமாக பிடிக்கும் ஜீன்ஸ் அணியவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தபோது, கால்களை மடக்கி அமர்ந்தால், அது கால்களின் செயலிழப்பை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 
 
எனவே, இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தபோது, கால்களை மடக்கி அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்