வடை மோர் குழம்பு செய்ய வேண்டுமா...?

தேவையான பொருட்கள்:
 
துவரம் பருப்பு - 2 கப்
உருட்டு உளுந்து - 50 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
தயிர் - 2 கப்
கடுகு - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
 
செய்முறை:
 
முதலில் உளுந்தை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். உளுந்து ஊறிய பின், இத்துடன் 2 பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும். இதை வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அரைத்த உளுந்தை வடையாக தட்டி பொறித்து எடுக்கவும்.
 
அதன் பிறகு தயிரை கடைந்து, அதனுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். கடுகையும் காய்ந்த மிளகாயும் தவிர மீதமுள்ள எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து தயிருடன் சேர்த்து கலக்கி அடுப்பில் வைத்து லேசாக பொங்கி வரும்போது இறக்கி கொள்ளுங்கள்.
 
பின் கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து தயிர் கலவையில் சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இரண்டையும் போட்டு கலக்கி மூடி வைக்கவும். இப்போது மோர் குழம்பு தயார். இதில் பொரித்து வைத்திருக்கும் வடையை சூடான மோர் குழம்பில் சேர்க்கவும். இப்போது சுவையான வடை மோர் குழம்பு தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்