இதய நோய் மட்டுமல்ல; நுரையீரல் குறைபாடுகள், ஜீரண கோளாறுகள், விலா எலும்பு பிரச்சினைகள், மன அழுத்தம், அதிக வாயு, ஆஸ்துமா, நிமோனியா ஆகியவையும் காரணமாக இருக்கலாம். இதய சம்பந்தப்பட்ட வலி என்றால், இடது தோள்பட்டை, கை, விரல்கள் வரை வலி பரவலாம். வியர்வை அதிகமாக வரும், மூச்சுத் திணறல், வாந்தி போல தோன்றும், இதயத்துடிப்பு வேகமாகும்.
பலர் வாயுவால் நெஞ்சு வலிக்கிறது என்று நினைத்து வீட்டு வைத்தியம் முயற்சிக்கிறார்கள், மருந்தகத்தில் விட்டு மருந்து வாங்குகிறார்கள். இது தவறு. உணவில் காரம், எண்ணெய், மசாலா அதிகம் இருந்தால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, நெஞ்சுவலி போல தோன்றலாம்.