குக்கரில் துவரம்பருப்பு, பெருங்காயம், சிறிது மஞ்சள் தூள் போட்டு அது முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணி விடவும்.
அரைக்க கொடுத்த பொருட்களை லேசாக வறுத்து ஆற வைத்து ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள கேரட், கத்திரிக்காய், மாங்காய், முருங்கை, தக்காளி மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். காய்கள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும்.
காய்கள் வெந்து மசாலா வாடை போனதும் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து புளி கரைசல் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். பருப்பு கொதித்தவுடன் மல்லித்தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி வெங்காயம் பொன்னிறமானதும் சாம்பாரில் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான அரைத்து விட்ட சாம்பார் தயார்.