துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு கடாயில் எண்ணெய்விட்டு அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எடுத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இதனை இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுத்து கொள்ளவேண்டும்.
பிறகு கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு, வெந்தயம், வெங்காயம், பூண்டு, தாளித்து புளியைக் கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து குழம்பாக தயாரிக்கவும். உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்து, குழம்பில் போட்டு இறக்கவும். சுவையான மிகுந்த கொள்ளு உருண்டை குழம்பு தயார்.