வீட்டின் மையப்பகுதியை எவ்வாறு அமைப்பதால் பலன்கள் உண்டு...?

Webdunia
ஒரு மனையின் மையப்பகுதியான பிரம்மஸ்தானத்தில் தேவர்கள் வசிப்பதாக வாஸ்து சொல்கிறது. அதனால், பழைய காலங்களில் வானம் பார்த்த வகையில்  பிரம்மஸ்தானத்தை திறந்த வெளியாக விடப்பட்ட வீடுகள் அமைக்கப்பட்டன.

ஒரு மனையின் கட்டிடப் பரப்பு அமைய உள்ள மனைப்பகுதியை 64 சம அளவுகள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கவேண்டும். அதன் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய திசைகளில் 3 பாகங்களும், கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளில் 3 பாகங்களும் தவிர்த்து, மையத்தில் எஞ்சியுள்ள பகுதி பிரம்மஸ்தானம் ஆகும். இது கட்டிடம்  அமைய உள்ள பரப்பில் 16-க்கு ஒரு பங்கு என்ற அளவாக அமையும்.
 
இந்த முறையின்படி வீடு அமைய உள்ள கட்டிடப் பரப்பை 16 சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும். அதில் மையத்தில் உள்ள 4 பாகங்கள் பிரம்மஸ்தானம் ஆகும். இதன்படி கட்டிடம் அமைய உள்ள மொத்தப் பரப்பில் நான்கில் ஒரு பாகம் ஆகும். அதைச் சுற்றிலும் உள்ள நான்கில் மூன்று பாகம் பங்கில் அறைகள் அமைத்து,  பிரம்மஸ்தானத்தைத் திறந்த வெளியாக விடலாம்.
 
இதன்படி பிரம்ம ஸ்தானத்தை எளிதாக நிர்ணயம் செய்யலாம். கட்டிடம் அமைய உள்ள நிலப்பரப்பை 9 சம பாகங்களாகப் பிரிக்கும் நிலையில், மையத்தில் உள்ள ஒரு பங்கு பிரம்மஸ்தானம் ஆகும். 
 
வீட்டின் மையமான பிரம்ம ஸ்தானத்தில் திறந்தவெளி விட்டு வீடு கட்ட முடியவில்லை எனும் நிலையில், ஹால், டிராயிங் ரூம் அல்லது லிவிங் ரூம் ஆகியவற்றை அந்தப் பகுதியில் அமைத்துக்கொள்ளலாம். 
 
பிரம்மஸ்தானப் பகுதியில் சமையலறை, கழிவறை, குளியலறை, லிப்ட், மின்சார அமைப்புகள், கிணறு, தரையடி தண்ணீர்த் தொட்டி, பேஸ்மெண்டு மற்றும் கழிவு நீர் தொட்டி ஆகியவை அப்பகுதியில் அமைப்பது கூடாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்