வைகாசி மாத வளர்பிறையில் மோகினி ஏகாதசி வழிபாடு !!

Webdunia
வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு 'மோகினி ஏகாதசி' என்று பெயர். விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின்போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால்தான் இதற்கு 'மோகினி ஏகாதசி' என்ற பெயர் வந்தது.

ஏகாதசி என்பது விஷ்ணு பக்தர்கள் ஒவ்வொ ருவருக்கும் ஏகாந்த தினமாகவே இருக்கும். பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் ஏகாதசி திதி, ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தது. வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு `மோகினி ஏகாதசி' என்று பெயர்.
 
விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின்போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால்தான் இதற்கு  `மோகினி ஏகாதசி' என்ற பெயர் வந்தது. இந்த நல்ல நாளில், விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் இந்தப் பிறவியின் வினைகள் மட்டும் அல்லாமல் முந்தைய பிறவியின் வினைகளும் சேர்ந்து அழியும் என்பது ஐதீகம்.
 
சீதைப் பிராட்டியைப் பிரிந்து வாடிய ராமச்சந் திரமூர்த்தி, தன் துன்பம் தீர்க்கும் வழியைத் தனக்கு உபதேசம் செய்யுமாறு, வசிஷ்ட முனி வரிடம் கேட்டார்.  பரம்பொருளான ராமரின் திருவுளம் அறிந்துகொண்டார் வசிஷ்டர். 
 
இந்த உலகிற்கு மோகினி ஏகாதசியின் சிறப்பை உணர்த்தவே, ராமபிரான் இவ்வாறு கேட்பதை உணர்ந்த வசிஷ்டர், குருவின் ஸ்தானத்தில் இருந்து ராமருக்கு மோகினி ஏகாதசியின் மகிமையை எடுத்துச் சொல்லி ராமபிரானை ஏகாதசி விரதம் அநுஷ்டிக்க உபதேசித்தார். 
 
கிருஷ்ணாவதாரத்தில், இந்த நிகழ்வினை தர்ம புத்திரருக்கு எடுத்துக்கூறும் பகவான் கிருஷ்ணர், மோகினி ஏகாதசியின் மகிமைகளையும் எடுத்துரைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்